தமிழக செய்திகள்

சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு பதில் தர ஒருமாதம் அவகாசம் வேண்டும்; 11 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு பதில் தர ஒருமாதம் அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்குக் காலக்கெடு விதிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் எனக் கூறியும் உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்டுப் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒருமாத கால அவகாசம் வேண்டும் என்று 11 எம்.எல்.ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை