தமிழக செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை

கடந்த டிசம்பர் 13-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை சிறைபிடித்து கைது செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுதலை செய்யக்கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து