தமிழக செய்திகள்

கொலை வழக்கில்12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

கொலை வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நாகர்கோவில்:

கொலை வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் தலைமறைவு

நாகாகோவில் வடசேரி புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ராஜன். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த ராஜன் தலைமறைவானார். அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தார்.

இந்தநிலையில் ராஜனை பிடிக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராஜன் கேரள மாநிலம் திருவல்லா பகுதியில் பதுங்கி இருந்தது தொய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தலைமை காவலர்கள் ரமேஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கேரளா சென்று ராஜனை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார்.

---

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு