தமிழக செய்திகள்

13 வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

13 வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

தினத்தந்தி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால், இரட்டை வாய்க்கால், நாட்டு வாய்க்கால் உள்பட 13 வாய்க்கால்கள் சுமார் 228 கி.மீட்டர் தூரம் செல்கின்றன. இந்த வாய்க்கால்களை மழைக்காலத்துக்கு முன்பு தூர்வாரி குப்பைகளை அகற்ற கடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே பெரிய வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக சிறிய வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள், சுத்தம் செய்யும் பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்கும் முன் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு