தமிழக செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் - சுகாதாரத்துறை நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. இதற்கான உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது.

அதன்படி வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி, முழு உடற்கவச உடை, 3 அடுக்கு முககவசம், காட்டன் முககவசம், 2 வகையான கையுறை, 3 வகையான கிருமிநாசினி, முக பாதுகாப்பு கவசம், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பெட்டகம் உள்பட 13 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதுடன், கிருமிநாசினி கொண்டு கை சுத்தம் செய்தப்பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். முககவசம் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடியில் முககவசம் வழங்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜென்டுகளுக்கு, கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். வாக்காளர்களும் பாதுகாப்புடன் வாக்களிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்