தமிழக செய்திகள்

கரளாவுக்கு கடத்த முயன்ற 1, 300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

வெவ்வேறு சம்பவங்களில் கரளாவுக்கு கடத்த முயன்ற 1, 300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

புதுக்கடை, 

கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி வேணுகோபால் தலைமையில் அதிகாரிகள் கருங்கல் அருகே உள்ள விழுந்தையம்பலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. உடனே அந்த காரை துரத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். பின்னர் காரை சோதனை செய்த போது அதில் பிளாஸ்டிக் கேன்களில் 350 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ஆப்பிக்கோடு பகுதியில் ரோந்து சன்ற போது சொகுசு காரில் கடத்திய 1,015 லிட்டர் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். மேற்கூறிய சோதனைகளில் மொத்தம் 1,365 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்