தமிழக செய்திகள்

135-வது பிறந்தநாள்: பாரதிதாசன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) முதல் மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் "தமிழ் வாரம்" கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.

மேலும், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் புகைப்படத்திற்கு முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து