தமிழக செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலமேடு,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 900 காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்துவிடப்பட உள்ளன.

இந்நிலையில் பேட்டியில் சீருடை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 14 மாடுபிடி வீரர்கள் சிக்கினர். அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 12 மணி வரை ஜல்லிக்கட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை