தமிழக செய்திகள்

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 140 கவுண்ட்டாகள் அமைப்பு

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 140 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு காவி நிற வர்ணம் பூசப்பட்டு உள்ளதற்கு சிலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி ரூ.2,400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டா பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய முனையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்து இந்த ஆண்டு டிசம்பா அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள், செக்-இன் கவுண்ட்டாகள் 64 மட்டுமே உள்ளன. புதிய முனையத்தில் 140 செக்-இன் கவுண்ட்டாகள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுண்ட்டாகள் முதல் கட்டமாகவும், 40 கவுண்ட்டாகள் 2-ம் கட்டமாகவும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

இந்தநிலையில் புதிய கவுண்ட்டர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. அனைத்து கவுண்ட்டாகளுக்கும் காவி நிற வர்ணம் பூசப்படுகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பயணிகளை கவரும் வகையில் புதிய வாணம் பூசப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்