தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 விதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் முதல் யூனிட்டில் 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது யூனிட் 2 அலகுகளில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து