தமிழக செய்திகள்

சிவகங்கை மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு

சிவகங்கை மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வரும் 27-ம் தேதியன்று தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களான மருது சகோதரர்களின் குருபூஜையும் , 30-ம் தேதியன்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜையும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஆயிசா அஜித் அறிவித்துள்ளார். இதற்காக சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்