தமிழக செய்திகள்

151-வது பிறந்தநாள்: வ.உ.சி. உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் (வ.உ.சி.) 151-வது பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் 'கப்பலோட்டிய தமிழன்' படம் இன்றும், நாளையும் காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் என 2 காட்சிகளாக 'டிஜிட்டல்' முறையில் திரையிடப்படவுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்