கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த ராந்தம் கிராமத்தில் தனியார் ஷூ கம்பெனி வேன் ஒன்று வேலை ஆட்களை இறக்கிவிட்டு விட்டு ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தது.
இன்று காலை 9 மணி அளவில் முள்ளுவாடி தனியார் கல்லூரி அருகே வந்தபோது ஆற்காட்டில் இருந்து செய்யார் நோக்கி சென்ற லாரி ஷூ கம்பெனி வேன் மீது மோதியது.
இதில் வேன் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.
வேன் டிரைவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அவர்களில் மூன்று பேர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.