அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்று, ஒரு மருத்துவ கல்லூரிக்கு 150 சீட்கள் பெற்று, அதற்குரிய வலுவான கட்டமைப்புகள் அ.தி.மு.க ஆட்சியின்போது தொடங்கியது. இது மத்திய அரசு திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வு.
இதில் தற்போது 850 இடங்கள் மட்டுமே வந்திருப்பது என்பது எனக்கு கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. மாநில அரசு, மக்கள் நல்வாழ்த்துறை உடனடியாக தேவையான அறிக்கைகளை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு சமர்ப்பித்து, இந்த கல்வி ஆண்டிலேயே 1,650 இடங்களையும் பெறவேண்டியது தமிழக அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.