சென்னை,
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி - வில்லிவாக்கம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகளை நடைபெறும் காரணத்தால் இன்று (27-ந்தேதி) காலை 10.20 மணி முதல் 1.20 மணி வரை ஒரு நாள் மட்டும் 3 மணி நேரத்துக்கு 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.