தமிழக செய்திகள்

சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் 19 பவுன் நகை பறிப்பு

சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் 19 பவுன் நகையை பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் சி.கொத்தங்குடி பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை நகர் கோவிந்தசாமி நகரை சேர்ந்த ஜானகி (வயது 70) என்பவரிடம் 5 பவுன் நகை, சிவபுரி வடபாதி தெருவை சேர்ந்த லட்சுமியிடம் (45) 2 பவுன் நகை, முத்தையா நகர் பாரதி சாலையை சேர்ந்த சந்திரோதயம் (54) என்பவரிடம் 12 பவுன் தங்க சங்கலி ஆகியவற்றை மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்