சென்னை,
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதிதாக 1,933 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,84,969 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,887 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,300,96 பேர் குணமடைந்துள்ளனர்.
34 பேர் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 34,462 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 20,411 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 236 பேரும், சென்னையில் 211 பேரும், ஈரோட்டில் 177 பேரும்,சேலத்தில் 120 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.