தமிழக செய்திகள்

19வது மெகா முகாம்: 16.29 லட்சம் பேர் பயன்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 19 வது மெகா தடுப்பூசி முகாமில் 16.29 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மையங்களில் 19 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுபற்றி தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று கூறுகையில், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 19 வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 16,29,736 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 9,31,03,288 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2.17 லட்சம் பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33,129 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் சரியான நேரத்தில் 2ம் தவணையை செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் உடலில் 6 மாதத்திற்கு பின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தாமதிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து