தமிழக செய்திகள்

மணலியில் 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு

சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் வேணுகோபால் சாமி கோவில் 2 ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் வேணுகோபால் சாமி கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சாமி சிலைகள் இருந்தன. நேற்று காலை இந்த கோவிலின் இரும்பு கேட் உடைந்து கோவில் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மணலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் கோவிலுக்கு வந்த போலீசார், கோவிலை சோதனையிட்டபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 2 ஐம்பொன் சிலைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம தலைவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிலைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்