தமிழக செய்திகள்

போச்சம்பள்ளி அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

போச்சம்பள்ளி அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொல்லஅள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). இவரும், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளம்பட்டியை சேர்ந்த மவுலி (25) என்பவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 4-ந் தேதி இரவு இவர்கள் மூங்கம்பட்டி பகுதியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக சென்றனர். அந்த நேரம் மவுலி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அசோக்குமார் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக அசோக்குமார் போச்சம்பள்ளி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் மவுலி, வீரமணி (31), ரஞ்சித் (30), சிரஞ்சீவி என்கிற இளவரசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மவுலியும், வீரமணியும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்