தமிழக செய்திகள்

நாகையில் என்.ஐ.ஏ கைது செய்த 2 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

நாகையில் கைதான அசன் அலி, ஆரிஷ் முகமதுவை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹரிஷ் முகமது, சிக்கலைச் சேர்ந்த ஹசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களது வீடுகளில்செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு வரை அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், இன்று சென்னைபூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும்ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, ஹாரிஸ் முஹம்மது, ஹசன்அலி ஆகியோரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூரபாண்டியன் உத்தரவிட்டார். எழும்பூரில் நீதிபதி குடியிருப்பில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு