தமிழக செய்திகள்

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

திசையன்விளையில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை அம்பேத்கர் தெரு செல்வ மருதூர் காலனியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி வள்ளித்தாய் (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் கொடிமுருகன் மகன் இசைமுத்து (22). கருத்துவேறுபாடு காரணமாக இசைமுத்து மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு வள்ளித்தாய் தான் காரணம் என எண்ணிய இசைமுத்து, அவரது உறவினர் சுடலைமகன் பிரபாகர் (23) ஆகிய இருவரும் வள்ளித்தாய் வீட்டிற்கு சென்றனர். அங்கு வள்ளித்தாயை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இதில் காயம் அடைந்த அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து இசைமுத்து, பிரபாகர் ஆகியோரை கைது செய்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...