சிதம்பரம்,
புதுச்சத்திரம் போலீசார் ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கடலூர் திருவந்திபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் முத்து (வயது 28), ரகு மகன் சிவா என்கிற தினேஷ் (31) என்பதும், இவர்கள் 2 பேரும் விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து முத்து, தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.