தமிழக செய்திகள்

காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

காரில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூருக்கு குட்கா கடத்தப்படுவதாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கனகம்மாசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவள்ளுரை நோக்கி, சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் குட்கா, புகையிலை பொருட்கள் 17 கிலோ இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குட்காவுடன் காரை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்திய திருவள்ளூர் ஆசூரி பகுதியை சேர்ந்த சத்ரராம் (வயது 30), ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 26) ஆகியோரை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை