தமிழக செய்திகள்

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சின்னக்கோடியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது32). இவர் நேற்று காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் சந்தேகத்தின்பேரில் அருகில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பட்ல பள்ளி பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் கோவிந்தன் (27) என்பதும், ராஜேஷின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.

இதே போன்று காட்பாடி கிழித்தான் பட்டறை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவர் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் நவீன் குமார் (21) என்பதும், கோவிந்தராஜ் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கோவிந்தன், நவீன்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை