தமிழக செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம் செய்த 2 சிறுவர்களுக்கு சிறை

2 சிறுவர்களுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருப்பூர்,

தாராபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய 2 சிறுவர்கள் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். கடந்த ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதுகுறித்து கே.வி.ஆர்.நகர் மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 2 சிறுவர்களுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், செங்கல்பட்டில் உள்ள அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்கி அங்கு அவர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப தொழிற்கல்வி அளிக்கவும் முதன்மை நடுவர் செந்தில்ராஜா, உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து