தமிழக செய்திகள்

2 கண்டெய்னர் லாரிகளில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வருகை

2 கண்டெய்னர் லாரிகளில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வருகை வரும் திங்கள் முதல் வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் என தகவல்..

தினத்தந்தி

சென்னை,

புதிய 200 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய 500 ரூபாய் நோட்டு அளவுக்கு இருக்கும் இந்த நோட்டு சந்தன கலரில் உள்ளது.

புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ரூ.150 கோடி மதிப்புக்கு சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. 2 கண்டெய்னர் லாரிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன

அவை வங்கி பாதுகாப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் புழக்கத்துக்கு விடவில்லை.

வருகிற திங்கட்கிழமை (28-ந்தேதி) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் விநியோகத்துக்கு வர உள்ளது. தேவையான அளவுக்கு பணம் வராததால் உடனடியாக அனைத்து வங்கிகளிலும் கிடைக்காது. அடுத்த வாரம் மேலும் பணம் வருகிறது. அதன் பிறகு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது