தமிழக செய்திகள்

2 நாட்கள் மின்நிறுத்தம்

வாய்மேடு பகுதியில் 2 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

வாய்மேடு:

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாய்மேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இ்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான தகட்டூர், தாணிக் கோட்டகம், பிராந்தியங்கரை, கரியாப்பட்டினம், செட்டிப்புலம், கத்தரிப்புலம், அவரிக்காடு, நாகக்குடையான் ஆகிய பகுதிகளுக்கு நாளை(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதேபோல் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான. துளசியாப்பட்டினம், வண்டுவாஞ்சேரி, அண்ணா பேட்டை, கரையங்காடு, கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு, இடும்பாவனம், தில்லைவிளாகம் ஆகிய பகுதிகளில் 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்