சோளிங்கர்
மேல்வெங்கடாபுரம் பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வேலூர் மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை காட்டரம்பாக்கம், காட்டரம்பாக்கம் மோட்டூர், ஒழுகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், நாளை (வெள்ளிக்கிழமை) சூரை, சூரை மோட்டூர், ராமாபுரம், புலிவலம், ஆயல், பிள்ளையார் குப்பம், நாகதாளிகல் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் உமாசந்தரா தெரிவித்துள்ளார்.