தமிழக செய்திகள்

லாரியில் டயர் திருடிய 2 டிரைவர்கள் கைது

நாமக்கல் அருகே லாரியில் டயர் திருடிய டிரைவர்கள் ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது42). லாரி டிரைவர். இவர் தான் ஓட்டி வந்த லாரியை நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜின் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி இருந்தார். வண்டியின் டெய்லர் அந்த நிறுவனத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

அதிகாலை 1.30 மணி அளவில் டெய்லரில் இருந்த 3 டயர்களை கழற்றிய மர்ம நபர்கள் 2 பேர் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் மாற்ற முயன்றனர். இதை கவனித்த பாண்டியராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த ராமர் (27), விக்னேஷ் (29) என்பதும், லாரி டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன டயர்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்