புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள்.
55 பேருக்கு தொற்று
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 94 பேர், வீடுகளில் 596 பேர் என 490 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 86 பேர் குணமடைந்தனர்.
2 முதியவர்கள் பலி
கடந்த சில நாட்களாக இறப்பு இல்லாத நிலையில் நேற்று 2 முதியவர்கள் பலியானார்கள். அதாவது அரும்பார்த்தபுரம் வென்னிசாமி நகரை சேர்ந்த 83 வயது முதியவர், சாணரப்பேட்டையை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோர் இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,852 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 1.30 சதவீதமாகவும், குணமடைவது 98.16 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 1,315 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 353 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 10 லட்சத்து 82 ஆயிரத்து 250 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.