தமிழக செய்திகள்

லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் பலி

கிரிவலத்துக்காக திருவண்ணாமலை சென்றபோது லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

மதுரை மாவட்டம் மட்டங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி ஜெயமதி (வயது 53). இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 பெண் பக்தர்களும், மார்கழி மாத பவுணர்மியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்வதற்காக ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். அந்த வேனை கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (63) ஓட்டினார்.

நள்ளிரவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே அந்த வேன் சென்றது. அப்போது அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி லாரியின் பின்புறத்தில் சிக்கி உருக்குலைந்தது.

2 பெண் பக்தர்கள் சாவு

இந்த விபத்தில் வேனில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்த ஜெயமதி மற்றும் மட்டங்கிப்பட்டியை சேர்ந்த கண்ணனின் மனைவி கோமதி (40) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் டிரைவர் மற்றும் 6 பெண் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். 9 பெண் பக்தர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு