தமிழக செய்திகள்

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகள் கொலை

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்ற தாய் தானும் அதே குளிர்பானத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி ஜமுனா (வயது 32). இவர்களுக்கு யாஷிகா (4), யோகிதா (1) என 2 மகள்கள்.

ஜமுனா ஒன்றரை ஆண்டுகள் காலமாக தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜமுனா தனது 2 குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்து விட்டார்.

குழந்தைகளை கொன்று தற்கொலை முயற்சி

இதில் யாஷிகா, யோகிதா 2 பேரும் இறந்து விட்டனர். ஜமுனா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜமுனாவை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை