தமிழக செய்திகள்

கார் மோதி 2 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

சிவகாசி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள சித்திரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 26). டிரைவர். சம்பவத்தன்று சந்திரசேகர், தனது நிறுவன உரிமையாளர் கணேசன் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சாத்தூர்-கோவில்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கணேசன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த கார், கணேசன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முத்துப்பாண்டி (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து