தமிழக செய்திகள்

மான் கறி சமைத்து சாப்பிட்ட மேலும் 2 பேர் கைது

மான் கறி சமைத்து சாப்பிட்ட மேலும் 2 பேரை வனத்துறையில் கைது செய்தனர்.

தினத்தந்தி

சிவகிரி:

நெல்லை மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சிவகிரி வனச்சரக அலுவலர் இரா.மவுனிகா தலைமையில் தனிக்குழுவினர் சிவகிரி தெற்குப்பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்கைக்குட்பட்ட உள்ளார் கிராமத்தின் மேற்கே உள்ள ஒரு தோப்பில் சோதனை செய்தனர். அப்போது கடமான் மற்றும் புள்ளிமானின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர். தப்பியோடிய சிலரை பிடிக்க சிவகிரி வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தை சேர்ந்த மணிவேல் மகன் பொன்ராஜ் என்ற மன்னார் (வயது 30) என்பவரை ராஜபாளையம் தாலுகா தளவாய்புரத்திற்கு கிழக்கே மாஞ்சோலை பகுதியில் கைது செய்தனர்.

மேலும் அதே ஊரைச் சேர்ந்த தொந்தியப்பன் மகன் சதீஸ்குமார் (26) என்பவரை சிவகிரி அண்ணா வாழையடி தெற்கு தெரு பகுதியில் பதுங்கி இருந்த போது வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை