தமிழக செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் நாமக்கல், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில்,இன்று தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 மாணாக்கார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேராவூரணி தனியார் பள்ளி மாணவிக்கும், திருப்புவனம் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் ஒரு மாணவர், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை