தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழிலாளியை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் 2 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சியாம் (வயது 32). இவர் நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 3-வது பிரதான சாலையில், நடந்து சென்றபோது, தரையில் கத்தியை தேய்த்தபடி ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து சியாமை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து கத்தியால் குத்தி விட்டு அவரது செல்போனை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இதில் இடது கையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி சியாம், சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் 2 பேரை வலைவீசிதேடி வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்