தமிழக செய்திகள்

பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் 2 புதிய லிப்டுகள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் 2 புதிய லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. அதற்காக ரெயில் நிலையங்களில் லிப்டுகள் மற்றும் தானியங்கி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை கோட்டத்தில் 21 ரெயில் நிலையங்களில் 40 லிப்டுகளும், 18 நிலையங்களில் 55 தானியங்கி படிக்கட்டுகளும் செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் பயணிகளுக்காக 2 புதிய லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், திருநின்றவூர், குரோம்பேட்டை, பொன்னேரி, வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் புதிய லிப்டுகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் புதிதாக 2 தானியங்கி படிக்கட்டுகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்