தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்னவாசல் மேட்டுத்தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் மேட்டுத்தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், ரூ.540 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பர் தெருவை சேர்ந்த அய்யனார் (21) லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.