தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

அம்பை அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அம்பை:

அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பை ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பசுக்கிடைவிளையை சேர்ந்த நாராயணன் (வயது 59), ஊர்காடு தெற்கு கோட்டை தெருவை சேர்ந்த மாரியப்பன் (64) ஆகியோரை சோதனை செய்தபோது, கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ரூ.11,240 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து