தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

கன்னங்குறிச்சி:-

சேலம் அய்யன்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் வசந்த். கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள் திருடியதாக ஓமலூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (21) மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.