தமிழக செய்திகள்

வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தினத்தந்தி

கூலித்தொழிலாளி

பள்ளிபாளையம் அடுத்த சின்ன கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். சவரத் தொழிலாளி. இவரது மகன் கவுதம் (வயது 24). தொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் பாப்பாத்தி இறந்துவிட்டார். இதனால் கவுதம் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கவுதமை காப்பாற்றி பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் கவுதம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ஏட்டுகள் கண்ணன், ரஞ்சித்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாதணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருச்செங்கோடு வாலரைக்கேட் பண்ணக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவஞான சங்கர். விற்பனை பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா வைஷ்ணவி (வயது 37). இவர்களுக்கு 3 பெண்கள் குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் சிவஞான சங்கர் வெளியூர் சென்றிருந்த வேளையில் ரேணுகா வைஷ்ணவி வீட்டின் மேல் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ரேணுகாவின் மாமனார் நல்லுசாமி நீண்ட நேரமாகியும் மருமகள் கீழ் வீட்டு பகுதிக்கு வராததால் மேலே சென்று பார்த்தார். அப்போது மின்விசிறியில் ரேணுகா வைஷ்ணவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை