தமிழக செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தினத்தந்தி

நெல்லை அருகே உள்ள தாழையூத்து செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 85). இவருடைய பேத்தி ஆதிரா (வயது 12), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை ஆறுமுகம் தனது பேத்தி ஆதிராவை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். தாழையூத்து மேம்பாலம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக கோவில்பட்டியில் இருந்து நெல்லை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

இதில் ஆறுமுகம், ஆதிரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். ஆறுமுகம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், ஆதிரா தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து