தமிழக செய்திகள்

என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மசாஜ் சென்டர்

புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த மாதம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது உருளையன்பேட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் 17 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

அதையடுத்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் மசாஜ் சென்டர் உரிமையாளர் உள்பட 40 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே சென்னையை சேர்ந்த விக்னேஷ், புதுவை கொட்டுப்பாளையத்தை சேர்ந்த அருண், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த பூபதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது

இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த என்ஜினீயர் ரஞ்சித்தேவநாதன் (24), கடலூரை சேர்ந்த இன் சூரன்ஸ் ஏஜெண்டு சீனிவாசன் (23) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு