தமிழக செய்திகள்

2 பேருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி பொருட்காட்சி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி முதல் ஆலயம் அருகே தனியார் பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சி வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்காட்சி நடத்தும் நிர்வாகிகளிடையே அவ்வப்போது பொருட்காட்சி தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 1 மணி அளவில் பொருட்காட்சி திடல் முன்பு நின்று கொண்டு இருந்த பொருட்காட்சி தலைவர் டென்சிங் தரப்பினருக்கும், பொருளாளர் நிர்மலா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். அப்போது, நிர்மலாவின் மகன்கள் ராகேஷ், ஷியாந்த் ஆகிய 2 பேருக்கும் கத்திகுத்து விழுந்தது. எதிர் தரப்பை சேர்ந்த ஆல்வின் என்பவர் காயம் அடைந்தார். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து இருதரப்பினர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் டென்சிங், ஹிலாரி, ஜஸ்டின், ஆல்வின், ராகேஷ், சியாந்த் ஆகியோர் மீதும் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்