தமிழக செய்திகள்

வியாசர்பாடியில் வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்

வியாசர்பாடியில் வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரணடைந்தனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பஜா கார்த்திக் (வயது 31). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 14-ந் தேதி பெரம்பூரில் உள்ள சுடுகாட்டில் அவரது நண்பர்களே வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே காட்டான் மோகன், பிஸ்கா கார்த்திக், செந்தில்குமார், சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளிளான மது என்ற மாதவன், சத்தியநாராயணன் ஆகிய 2 பேர் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், முக்கிய குற்றவாளி மாதவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...