தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற குல்லா அணிந்த 2 பேர்

மோட்டார்சைக்கிளை குல்லா அணிந்த 2 பேர் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்

மோட்டார்சைக்கிளை குல்லா அணிந்த 2 பேர் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் நகராட்சி ஒப்பந்த ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை இரவு வீட்டின் முன்பாக வழக்கம்போல் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அவரது மோட்டார் சைக்கிளை நள்ளிரவு நேரத்தில் குல்லா அணிந்த இருவர் முகத்தை மறைத்தபடி திருடி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணை நடத்தி நேற்று ஒருவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்