தமிழக செய்திகள்

செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்த 2 பேர் கைது

செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு அடுத்த மலாளிநத்தம் பகுதியில் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டை சோதனை செய்தபோது நாட்டு துப்பாக்கி ஒன்றும், 3 தோட்டாக்களும் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவர் கூலி வேலை செய்து வரும் விநாயகமூர்த்தி (36) என்பது தெரியவந்தது. நாட்டு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்று விசாரித்த போது செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட திருமணி ஊராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளரான பிரபு (36) என்பவர் கொடுத்ததாக போலீசில் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து பிரபுவிடம் விசாரித்த போது திருமணியில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் கம்பெனியின் கட்டுமான பணியில் இருந்த ஒருவர் தனக்கு கொடுத்ததாக பிரபு போலீசில் தெரிவித்தார். இதனையடுத்து இருவரையும் இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்து செங்கல்பட்டு கோட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்