தமிழக செய்திகள்

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேட்டை:

நெல்லை பழைய பேட்டை நாராயணசாமி கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), தொழிலாளி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று சதீஷ்குமார் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மணிகண்டன் வந்தார். அவரை வழிமறித்து சதீஷ்குமார், அவரது சித்தப்பா கார்த்திக் ஆகியோர் அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரின் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்