தமிழக செய்திகள்

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

போடி அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

போடி அருகே உள்ள கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் பவுன் பாண்டியன் (வயது 41). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை இவர், முந்தல் சாலையில் உள்ள மாங்காய் கடையில் வேலை செய்து கொண்டிந்தார். அப்போது போடி டி.வி.கே.கே நகரை சேர்ந்த செல்வக்குமார் (24), ராஜ்குமார் (31) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் முன்விரோதம் காரணமாக திடீரென பவுன் பாண்டியனை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பவுன் பாண்டியன் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செல்வக்குமார், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து